ஊடகங்களுக்கு இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் கெங் ஷுவாங் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நியூசிலாந்து பிரதமர் சீனாவிற்கு மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கிறிஸ்ட்சேர்ச் தாக்குதலை தொடர்ந்து கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சீனாவும் நியூசிலாந்தும் முழுமையாக ஆராய்ந்து இந்த சரியான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
மேற்கத்தேய நாடுகளுடனான சீனாவின் உறவில், சீனாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உறவு பிரதானமாக காணப்படுகிறது.
பரஸ்பர மரியாதை அடிப்படையில் நியூசிலாந்துடனான பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சீனா எதிர்பார்த்துள்ளது” எனத் தெரிவித்தார்.
