பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன, அதனை எவ்வாறு அறிக்கையிடுவது என்பது பற்றி ஊழியர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் விளக்கும் வகையிலான பதாதைகளுடன் இந்த விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் பாலியல் ரீதியான நகைச்சுவைகள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்புவதை கண்டிக்கும் வகையிலான பதாதைகளும் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொருத்தமற்ற நடத்தை என்பது என்ன என்பது தொடர்பாக தெளிவான வரையறைகளை சேர்ப்பதன் மூலம் அரசாங்கம் அரசாங்கம் பணியிட கொள்கைகளை திருத்தியுள்ளதாக பெண்களின் நிலைக்கு பொறுப்பான அமைச்சர் றொச்சேல் ஸ்கொயார்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
