கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த பெண் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
