வான்சென் லூ (வயது 22) என்ற இளைஞன் ஒன்ராறியோ வீதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மக்களிடம் உதவி கோரியுள்ளார்.
இது தொடர்பாக குடியிருப்பாளர்கள் மாகாண பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறு காயங்களுக்கு உட்பட்டிருந்த குறித்த சீன இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லூ கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து கார்நிறுத்தத்திலிருந்த கண்காணிப்பு கமரா அவதானிக்கப்பட்டது. அதில் மூவர் குறித்த இளைஞனை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி வானில் கடத்திச் சென்றமை தெரியவந்தது.
இந்நிலையில், குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
