ஆனால் தமிழில் வெற்றிபெற்ற ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தமிழ் நடிகரான அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபிசிம்ஹா நடிப்பில் உருவான ‘ஜிகர்தண்டா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் பாத்திரத்தில் நடிக்க அதர்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் மூலம் அதர்வா தெலுங்கு திரையுலகில் காலடி வைக்கவுள்ளார்.
இதனிடையே, பாபிசிம்ஹா வேடத்தில் நடிக்க வருண்தேஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான 14-ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
