Guelph Hydro மற்றும் Alectra Utilities நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
தமது நிறுவனத்திலிருந்து அழைப்பு ஏற்படுத்துவதாகக் கூறி போலியான முறையில் சட்டவிரோத குழுவொன்று அழைப்புக்களை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலுவைக் கட்டணத்தை செலுத்தத் தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என சிலர் தொலைபேசி ஊடாக எச்சரிக்கை விடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் தானியங்கி அழைப்புக்கு நிகரான வகையில் இந்த அழைப்பு துல்லியமாக பதிவு செய்யப்பட்டு, வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இதுகுறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பாடுமாறு இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
