அமெரிக்காவுடனான இரண்டாவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் வியட்நாமிற்கு விஜயம் செய்த வடகொரிய தலைவர் மீண்டும் தமது நாட்டுக்கு செல்வதற்கு முன்பாக மௌசோலியத்துக்கு சென்றுள்ளார்.
அமெரிக்க -வடகொரிய உச்சிமாநாடு கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதி வியட்நாமில் இடம்பெற்றிருந்தது. வடகொரியா தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஈடாக அந்நாட்டின் பொருளாதார தடைகளை நிவர்த்தி செய்வதற்கு அமெரிக்க இணங்கியிராத நிலையில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாமல் போனது.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) தலைவர் கிம், ரயில் மூலமாக சீனாவின் ஊடாக வடகொரியா செல்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
