ரயில் மூலமாக வியட்நாம் செல்லவுள்ள தலைவர் கிம்மை வழியனுப்ப வியட்நாம் டொங் டேங் ரயில் நிலையம் முன்பாக பெருந்திரளானோர் கூடியிருந்தனர்.
வியட்நாமை விட்டு வெளியேறும் முன்பதாக வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.
அமெரிக்க -வடகொரியா உச்சிமாநாடு கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதி வியட்நாமில் இடம்பெற்றிருந்தது. வட கொரியா தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஈடாக அந்நாட்டின் பொருளாதாரத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு அமெரிக்க இணங்கியிராத நிலையில் ஒப்பந்தம் எதனையும் மேற்கொள்ள முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
