மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தி.மு.க. செயலாளர் கனிமொழி இராஜினாமா செய்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இருந்து கனிமொழி நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டமையை அடுத்து, அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இன்று (புதன்கிழமை) இராஜினாமா செய்துள்ளார்.
அதேபோல், பீகார் மாநிலத்தில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்ட மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோரும் தமது மாநிலங்களவை பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
அத்துடன் தமிழகத்தின் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸின் வேட்பாளரான வசந்தகுமாரும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





