அமெரிக்க செய்தி நிறுவனமொன்றிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ வழங்கிய செவ்வியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தமையை வரவேற்கிறேன். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பிரகாரம் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படும் நிதியையும் பாகிஸ்தான் முற்றிலும் தடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேற்கொண்ட புல்வாமா தாக்குதலே காரணம் என அமெரிக்க அமைச்சர் ஸ்டெனி ஹோயர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நேற்று இரவு 9 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
