பிரித்தானிய வானிலை அவதான நிலையத்தினால் இன்று(சனிக்கிழமை) இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 3 மணி முதல் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 6 மணி வரை Freya சூறாவளி வீசக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் Northern, Central and South West England மற்றும் Wales ஆகிய பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதிகளில் 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பிரித்தானிய வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
