
விமானியின் விடுலையை வலியுறுத்தி கொல்கத்தா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த ஆர்ப்பாட்டங்களின்போது மக்கள் இவ்வாறு பிரதமருக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.
இதன்போது, விமானியின் பாதுகாப்பான விடுதலையை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகள், சிறைப்பிடிக்கப்பட்ட விமானியின் ஒளிப்படங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி கொடிகள் என்பவற்றை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, அவரது விடுதலையை வலியுறுத்தி வாரணாசியில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
