
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது பிற்போடப்படுவதற்குரிய சாத்தியத்தை கண்டித்தே தீவிர பிரெக்சிற் ஆதரவாளரான விவசாய அமைச்சர் ஜோர்ஜ் யூஸ்டிஸ் இன்று பதவி விலகியுள்ளார்.
மார்ச் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது தனது திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் பிரெக்ஸிற்றை தாமதிப்பது குறித்து தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமென பிரதமர் உறுதியளித்திருந்தார்.
பிரெக்ஸிற் தொடர்பான பிரச்சினையால் பதவி விலகும் பிரதமர் தெரேசா மே-யின் அரசாங்கத்தின் 14வது உறுப்பினர் ஜோர்ஜ் யூஸ்டிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
