
இது குறித்த அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரில் சுயாதீன ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாராந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது 189 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 6,100 பேர் காயமடைந்தனர்.
இந்த மனித கொலைகளில், மறைந்திருந்து சுடும் இராணுவ வீரர்கள் மற்றும் தளபதிகள் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகளுக்கான சுயாதீன குழு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் காசா பகுதிகளுக்கு இடையே உள்ள எல்லைப்பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றது. இதன் பின்னர் குறித்த சுயாதீன ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டு கடந்த வருடம் மார்ச் மாதம் 30 – டிசம்பர் 31 ஆம் திகதி வரை விசாரணைகளை மேற்கொண்டு வந்தது.
குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள், மருத்துவ பதிவுகள், வீடியோ மற்றும் ட்ரோன் காட்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான நேர்காணல் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
