சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு நேபாள பகுதியில் பயணித்த ஹெலிகொப்டர் நேற்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளாகி இருந்தது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சடலங்கள் தேடப்பட்டு வந்தன.
இந்நிலையில் காத்மாண்டுவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள டாப்லஜங் பகுதியில் சடலங்கள் மீட்கப்பட்டன. இதன் போது இறந்தவர்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் ரபீந்திர அதிகாரியின் உடலும் அடங்குவதாக மத்திய அமைச்சின் பேச்சாளர் ராம் கிருஷ்ணா தெரிவித்தார்.
நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரம் உட்பட உயர்ந்த மலை பகுதிகளில் ஏராளமான வான் விபத்துகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
