
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியின் வலுவான உறுதிப்பாட்டை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வடகொரியாவால் ஜப்பானியர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் வியட்நாம் மாநாட்டில் கிம்-இன் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அதன்படி, வடகொரியாவினால் கடத்தப்பட்டவர்களில் உயிருடன் உள்ளவர்கள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை வடகொரியாவுடன் இராஜதந்திர உறவை தாம் பேண போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமின்றி பொருளாதார ரீதியான உதவிகளையும் வழங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
