
குறித்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது எல்லை நிலைவரங்கள் மற்றும் பாதுகாப்பு , விமானி அபிநந்தனை மீட்பது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சந்திப்பு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது எனவும், தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் முப்படைகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், எல்லை நிலைவரம், முப்படைகளின் தயார் நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
