இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை அணி 47 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசால் மென்டிஸ் அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் தாஹிர் மற்றும் Ngidi ஆகியோர் தலா 03 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 232 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி 38.5 ஓவர்கள் நிறைவில் 02 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து 232 ஓட்டங்களை பெற்று 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் அணித்தலைவர் டுபிளசிஸிஸ் 112 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது
