இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து, மீண்டும் தனுஷூடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் நடிகை சினேகா.
‘விஸ்வாசம்’ வெற்றிக்கு பின், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது சினேகா இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
அதேநேரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக, விரைவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள்து
