ஹன்சிகாவின் 50ஆவது திரைப்படமான மஹா திரைப்படத்தின் ஒளிப்படம் இந்து மதத்தில் உள்ள பெண் துறவிகளையும் இந்து மத உணர்வுகளையும் புண்படுத்துவது போன்று உள்ளது.
எனவே இயக்குநர் ஜமீல், ஹன்சிகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் நாராயணன், சென்னை பொலிஸ் ஆணையரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் புகார் கொடுத்து ஒரு மாதமாகியும் நடவடிக்கை இல்லை. எனவே முறைப்பாடு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. நடிகை ஹன்சிகா, இயக்குநர் ஜமீல் மீதான புகாருக்கு இரு வாரங்களில் பதிலளிக்க பொலிஸ் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹன்சிகாவின் 50ஆவது மஹா திரைப்படத்தை அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கி வருகின்றார்.
இத்திரைப்படத்தில் கருணாகரன், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். ஜிப்ரானின் இசையில் ஹன்சிகா பெண் துறவி வேடத்தில் புகைப்பிடிப்பது போன்ற ஒரு ஒளிப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்க்து.
