குறித்த சந்தேகநபர்கள் நேற்று (சனிக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 32கிராம் 32 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
26 வயதுடைய நைஜீரிய நாட்டவர்கள் இருவரும் 40 வயதுடைய மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
