அதன்படி இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013 மார்ச் மாதம் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்பட்ட குறித்த விமான நிலையம், பின்னர் ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்து இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வைத்து தொடர்பில் முடிவு செய்யப்பட்டது. இருந்தபோதும் அதன் பேச்சுவார்த்தைகள் பின்னர் இடைநிறுத்தப்பட்டன.
மேலும் மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு இறுதியாக டுபாய் விமான நிறுவனம் வர்த்தக விமான பயணத்தை மேற்கொண்ட போதும் அது பின்னர் இடைநிறுத்தப்பட்டது.
குறித்த விமான நிலையத்தின் மேம்பாட்டு பணிக்காக 210 மில்லியன் ரூபாய் மேலதிகமாக தேவை ஏற்பட்ட காரணத்தினாலேயே அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
