இந்தப் பேச்சுவார்த்தை, இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ, மற்றும் இந்திய அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்றதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தப் படகுச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால், இலங்கையின் சுற்றுலாத்துறையை பெரிதும் ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்பொழுதும் ஆரம்ப திட்டமிடல் நிலையிலேயே இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
