இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பக்தர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டு சந்நிதானத்திற்குள் நுழைந்தமையினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹராம, ரண்மினிதென்ன பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தீ மூட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
