கனடாவின் பிரம்ப்டன் பகுதியில் தந்தையால் கொடூரமாக கொல்லப்பட்ட 11 வயது சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.சிறுமியின் பாடசாலை அருகே அமைந்துள்ள பூங்கா ஒன்றில் கூடிய அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பலரும் சிறுமியை நினைவு கூர்ந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து அன்று மாலை குழந்தை மீண்டும் வீடு திரும்பாத நிலையில் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் உயிரிழந்தநிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதனிடையே, சிறுமியின் மரணத்தில் தந்தைக்கு தொடர்பு இருப்பதாக கருதி பொலிஸார் ரூபேஷ் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





