LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+7°C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 7, 2019

எட்மன்டனில் தொடரும் வானிலை எச்சரிக்கை! : குளிர் காற்று நீடிக்கும்

கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத் தலைநகர் எட்மன்டனில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிராந்தியத்தில் நாளை (வியாழக்கிழமை) வரை தொடர்ந்து குளிர்காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும்குளிர் பாதிப்பினால் இதுவரை சுமார் பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பனிமூட்டமான காலநிலை காரணமாக இக்காலப்பகுதியில் அதிகளவு விபத்துகள் சம்பவித்திருப்பதாக எட்மன்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் 518 விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், மிகுந்த அவதானத்துடன், மெதுவாக வாகனங்களை செலுத்துமாறு வாகனச் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7