LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 18, 2019

பிராந்தியங்களுக்குள் மோதலை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கின்றது – ஈரான்

பிராந்தியங்களுக்குள் மோதலை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கின்றது என்றும் இந்நிலையில் இஸ்ரேல் போரொன்றினை எதிர்பார்த்துள்ளதாகவும், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மொஹமட் ஜவாத் ஜரிஃப் இவ்வாறு கூறினார்.

அத்தோடு சிரியாவில் குண்டுவீச்சு தாக்குதளை நடத்தி சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல் மீது குற்றம் சாட்டி, அப்பிராந்தியத்தில் இருந்து இஸ்ரேலை வெளியேற்ற அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும் இதன் மூலம் வரும் ஆபத்து (போர்) பெரியது என்றும் சர்வதேச சட்டத்தினை, மிகத் தீவிரமாக மீறுவதாலும் தொடர்ந்தும் பாராமுகமாக இருப்பதாலும் ஆபத்து இன்னும் அதிகமாகும் என கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7