தெற்காசியா மற்றும் சீனாவிற்கான பயணத்தின் ஓர் அங்கமாக, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.அவரது பயணத்தை முன்னிட்டு பாகிஸ்தானில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான நிலை அதிகரித்துள்ள நிலையில் அவருடைய இந்த விஜயம் அபாயகரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், பாகிஸ்தானும் இந்த சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித சம்பந்தங்களும் இல்லை என அறிவித்துள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் இந்தோனேஷியா, மலேசியாவிற்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதும் அவரது பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக இரு நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் விஜயத்தின் போது பாகிஸ்தானுடன் 10 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள முதலீட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.





