LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 18, 2019

கொலராடோ – டென்வர் பகுதியில் 49 வாகனங்கள் மோதி விபத்து: 17 பேர் காயம்!

அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலராடோ – டென்வர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள வீதியில் 49 வாகனங்கள் ஒன்றோடு ஓன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன் இதன் காரணமாக விமான நிலையத்திற்கான பாதைகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் மொத்தம் 17 பேர் காயமடைந்ததாகவும், இதில் மூவருக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மற்றைய 14 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 14 பேரின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போது குறித்த வீதியை மீண்டும் போக்குவரத்துக்காக திறந்துவிடுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7