LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+7°C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 9, 2026

தேசிய உற்பத்தித்திறன் விருது பெற்று கல்குடா கல்வி வலயம் சாதனை

 (க.ஜெகதீஸ்வரன்)

தேசிய மட்டத்தில் கல்வித்துறையில் மற்றொரு வரலாற்றுச் சாதனையை கல்குடா கல்வி வலயம் பதிவு செய்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று எமது வலயம் தனது திறனை நிரூபித்துக் காட்டியுள்ளது.

இதற்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழும் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கல்குடா கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் - ளுடுநுயுளு அவர்கள்   இவ்விருதினை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.

வலயத்தின் காத்திரமான நிர்வாகம் மற்றும் வினைத்திறனான செயற்பாடுகள், ஒருமித்த உழைப்பு மற்றும் குழுச் செயற்பாடு,  அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்குக் கிடைத்த உன்னத தேசிய அங்கீகாரமே இந்த வெற்றியாகும்.

வலயக் கல்விப் பணிப்பாளரின் தூரநோக்குச் சிந்தனைக்கும் ஆளுமைமிக்க வழிகாட்டலுக்கும் பலம்சேர்த்து, வெற்றியை ஈட்டித் தருவதற்கு அரும்பாடுபட்ட வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக்கல்விப் பணிப்பாளரும் தேசிய உற்பத்தி திறன் இணைப்பாளருமான க.ஹரிகரராஜ் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளரும் தேசிய உற்பத்தி திறன் பொறுப்பு உத்தியோகத்தருமாகச் செயற்பட்ட திருமதி.என்.அகிலன் மற்றும்   பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7