(சோ.ஜெகதீஸ்வரன்)
திருகோணமலை, கிழக்கு மாகாண திட்டமிடல் செயலகத்தில் 2026ஆம் ஆண்டிற்கான நவராத்திரி விழா திட்டமிடலுக்கான பிரதிப்பிரதம செயலாளர் ந.தமிழ்ச்செல்வன் தலைமையில் செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) வெகுசிறப்பாக நடைபெற்றது.
மத நல்லிணக்கத்தையும் இந்துசமய பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இவ் விழாவில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை கன்னியா நடேசர் ஆலயத்தின் பிரதமகுரு நடாத்தினார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கு.குணநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் இரு சிறுவர்களுக்கு வித்தியாரம்பமும் செய்து வைத்தார். அத்துடன் கிழக்கு மாகாண திட்டமிடல் செயலகத்தின் பணிப்பாளர். எஸ்.எச்.எம்.பசூர், திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஜோன்பிள்ளை, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் புண்ணியமூர்த்தி குமணன் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











