LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 9, 2019

நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் அபாயத்தில் கனேடிய பல்கலைக்கழகங்கள்!

சீனாவுடனான முரண்பாடுகள் காரணமாக கனேடிய பல்கலைக்கழகங்கள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதியியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் ‘மூடிஸ்’ முதலீட்டார் சேவை நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடனாவிற்கும், சீனாவிற்கும் இடையே இராஜதந்திர நெருக்கடிகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக கனேடிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சீன மாணவர்களை சீனா நாட்டிற்கு திருப்பி அழைக்கும் பட்சத்தில் இந்த அபாயம் ஏற்படும் என குறித்த அமைப்பு எச்சரித்துள்ளது.

கனேடிய மாணவர்களைவிட சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் அதிகமாகக் காணப்படுகிறது. இது பல்கலைக்கழகங்களுக்கான முக்கிய வருமான ஆதாரமாக விளங்குகிறது என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஹுவாவி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி கனடாவில் கைது செய்யப்பட்டது முதல், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7