சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா-விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில், ரஜியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு விதைகள் அடங்கிய பை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சௌந்தர்யா – விசாகன் திருமணம் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. திருமணத்தில் கலந்துகொள்ள தனது நண்பர்கள், திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களை சந்தித்து ரஜினிகாந்த் அழைப்பிதல் வழங்கி வருகின்றார்.
சௌந்தர்யா திரைத்துறையில் பணியாற்றும் நிலையில், விசாகன் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார்.
சௌந்தர்யாவின் முதலாவது திருமண பந்தம் முறிவடைந்துள்ள நிலையில், அவர் தனது இரண்டாவது திருமண பந்தத்தில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





