இயக்குனர் பாலா இயக்கத்தில் துருவ் நடிக்கும் ‘வர்மா’ திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.தெலுங்கில் வெளியாகி வெற்றியீட்டிய அர்ஜூன் ரெட்டி என்ற திரைப்படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக துருவ் நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். இதேவேளை இந்த திரைப்படம் இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் கைவிடப்பட்டுள்ளதாக படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் “இந்த திரைப்படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மேலும் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம்.
மேலும் வர்மா படத்தை துருவ்வை வைத்தே மீண்டும் முதலில் இருந்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்” என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.





