LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 9, 2019

கலிடன் வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என்ன? – விசாரணை அறிக்கை!

கலிடன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்திற்கு இயற்கை எரிவாயுவே காரணம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருப்பினும் இந்த சம்பவம் தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே நடந்ததா என்பது தொடர்பில் தெளிவில்லாமல் இருப்பதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலிடன் கிராமத்திற்கு அருகே மப்பிள் கிரோவ் வீதி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6:20 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் அடுத்து அங்கு குடியிருந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 22 வீடுகள் சேதமடைந்ததுடன் சுமார் 30 முதல் 35 பொதுமக்கள் தமது உடமைகளை இழந்தனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை 7 வீடுகளில் மீட்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கையை அடுத்து வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7