
இதன்படி பாடசாலை, நிறுவனங்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு மஹராஷ்டிர அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், பாடசாலை குழந்தைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
மேலும் இராணுவ படைத்தளம், கடற்படை தளம், இராணுவ முகாம்கள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கோரியுள்ள அதேவேளை சி.சி.ரி.வி. கமராக்களையும் அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் இரு போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், இந்த விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து நேற்று இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள், பயிற்றுநர்கள், மூத்த தளபதிகள் மற்றும் தற்கொலைப்படையினர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையிலும் பரஸ்பர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
