
இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் காணப்படும் பதற்றநிலை தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னரான சூழ்நிலையினை தேர்தல் ஆணையம் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றது.
எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாதிப்புக்களை ஏற்படுத்தாது.
எனினும் குழப்பநிலைகள் காணப்பட்டாலும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தேர்தல் ஆணையகம் தனது கடமைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்” என தலைமைத் தேர்தல் ஆணையாளர் அசோக் லவாஸா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
