
இஸ்லாமாபாத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “அடுத்த 72 மணிநேரம் எமக்கு மிகவும் முக்கியமானது. ஒருவேளை இந்தியாவுடன் போர் இடம்பெறுமாக இருந்தால் அது இரண்டாம் உலகப் போரைவிட பயங்கரமானதாக இருக்கும். அதற்கு பாகிஸ்தான் முழுமையாக தயாராகி இருக்கிறது.
பாகிஸ்தான் முழுதும் போர்மேகங்கள் சூழ்ந்துள்ளதுடன், போருக்கான மனநிலையில்தான் இருக்கிறோம். ஏற்கனவே அவசரகால நிலைக்கான சட்டங்களை பிறப்பித்து அதை பின்பற்றி வருகிறோம்.
எனவே அடுத்துவரும் 3 நாட்கள் மிக முக்கியமானவை. இப்போதுள்ள சூழல் அடுத்துவரும் நாட்களில் போராக மாறலாம் அல்லது அமைதிக்கும் திரும்பலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய விமானப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் ஜெய் ஷி முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் உட்பட தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடதக்கது.
