
அபினந்தன் கௌரவமாக நடத்தப்படுவதாக பாகிஸ்தான் தரப்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அபினந்தன் கையில் தேநீர் கோப்பையுடன் முகத்தில் எவ்வித கலவரமுமின்றி உரையாடும் காட்சி உள்ளது. அதில் தான் நல்லபடியாக நடத்தப்படுவதாக அபினந்தன் தெரிவித்துள்ளார்.
ஆனபோதிலும் கைதியாக இருக்கும் அபினந்தனின் விடுவிப்பு குறித்த எதிர்பார்ப்பே இப்போது வலுத்துள்ளது. இந்நிலையில், இந்த வியடம் குறித்து இந்தியாவின் ஓய்வுபெற்ற பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், அபினந்தனை நாம் போர்க்குற்றவாளி என்று எடுத்துக்கொள்ள முடியாது. தற்போது அபினந்தன் பாகிஸ்தான் காவலில் உள்ளவர்தான். அவரை போர்க்குற்றவாளி என பாக்கிஸ்தான் அறிவிக்காது. அது போர் நடந்தால்தான் போர்க் குற்றவாளி என்று கூறப்படும். அவ்வாறு இரு நாடுகளுக்கிடையில் போர் எதுவும் வரவில்லை.
ஆகவே அவர் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைதியாக பிடிக்கப்பட்டவர் என்பதுதான் தற்போதைய நிலையாகும். போர்க் குற்றவாளி என்கிற வார்த்தை இப்போது வரக்கூடாது.
இதேவேளை, அபினந்தன் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இந்தியத் தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் போரை விரும்பவில்லை என அறிவித்துள்ளார்.
அவ்வாறு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில் முதல் கோரிக்கையாக எங்கள் விமானியை விடுவித்தால் பேசலாம் என்கிற கோரிக்கையை இந்தியா முன்வைக்கும்.
இந்த நிலையில், குறித்த விமானியை ஆரம்பத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்கியுள்ளனர். ஆனால் இப்போது உலகின் பார்வை அபினந்தன் மீது திரும்பியுள்ளது.
ஆகவே மேற்கொண்டு விமானியை துன்புறுத்தும் நடவடிக்கையை பாகிஸ்தான் இராணுவம் செய்ய எத்தணிக்காது. அவ்வாறு நடந்தால் அது ஐ.நா. வரை எதிரொலிக்கும். ஆனால் அவர் கைதியாகத்தான் நடத்தப்படுவார்” என இராணுவ அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
