
இந்தியா மீதான விமானத் தாக்குதல்களையடுத்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது நாடு பாதுகாப்பான கரங்களில் இருப்பதை நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். இந்திய நாட்டை அன்னியர்கள் எவரும் அழிக்க இடமளிக்கமாட்டேன்.
நாட்டின் தேசிய பாதுகாப்பினை முன்னிறுத்தியே எமது நடவடிக்கைகள் தொடரும். தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்திய நாட்டின் மீது எவரும் கைவைத்தால் அதன் விளைவுகளை அவர்கள் உரிய நேரத்தில் அனுபவிப்பார்கள்.
எமது நாடு பல இராணுவ வீரர்களின் உயிர்த்தியாகத்தின் அர்ப்பணிப்பில் உருவானது. அவர்களது தியாகம் வீண்போவதற்கு நாம் என்றுமே இடமளிக்கப்போவதில்லை” என பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
