
சியாட்டில் – லோஸ் ஏஞ்சல்ஸ் வழித்தடத்தில் பயணிகள் ரயில் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த போது பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் ரயில் பாதையில் மரக்கிளைகள் விழுந்தன.
இதனைத் தொடந்து, ரயில் திடீரென அப்பகுதியில் நின்ற நிலையில் அதன் எஞ்சின் முற்றிலுமாக செயலிழந்தது. இதனால் பயணிகள் அனைவரும் பதற்றம் அடைந்ததைத் தொடர்ந்து, உடனடியாக ரயில்வே துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் வந்த ரயில் எஞ்சின் மற்றும் ஊழியர்களால், அன்று இரவு முழுவதும் பழுது பார்க்கப்பட்டும் ரயிலை உடனடியாக இயக்க முடியவில்லை. எனினும், ரயில்வே ஊழியர்கள் கடுமையாக போராடியுள்ளனர்.
சுமார் 36 மணிநேரத்திற்கு பிறகு எஞ்சினின் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதனால் நேற்று காலை ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
இந்த தடங்களின் போதும் ரயிலில் பயணம் செய்து 183 பயணிகளுக்கும் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டதால், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
