
1994 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை முடிவுற்ற பிறகு, ஜனநாயகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நாடாளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அவ்வகையில் மே 8 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையில், மே 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக ஜனாதிபதி முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குகளை போடுவதற்கு ஏதுவாக, அந்நாளை பொது விடுமுறையாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.
