இக்கருத்தரங்கில் தமிழ் மொழிமூலம் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் எப்பாகத்திலிருந்தும் எந்தவொரு மாணவருக்கும் கலந்துகொள்ளும் வாய்ப்பினை வழங்குகிறது. இவ் இலவச கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் 0775746881 எனும் இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தங்களை பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
கல்விப்புலத்தில் சிறந்த ஆளுமைகளை உருவாக்குதல், சட்டத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சமூகமொன்றை கட்டியெழுப்புதல், சிறந்த இளம் தலைமைகளை தயார் செய்யும் உயரிய நீண்டகால நோக்கில் டி.எம்.கே அஸோஸியேட்ஸ் இம்முயற்சியினை முன்னெடுத்து வருகிறது.
அத்துடன் மாணவர்கள் ஏன் சட்டத்துறையை தெரிவுசெய்ய வேண்டும், சமூகத்தில் அதன் எதிர்கால தேவை, உயர் தர தொழில் வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்களை வழங்கும் வகையில் தேசிய ரீதியில் சட்டத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்களை கொண்டு இக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
போட்டிப் பரீட்சை தொடர்பில் மிகவும் அனுபவம் மிக்க வளவாளர்களை கொண்டு தொடர்சியான பயிற்சிகள் வழங்கப்பட்டு திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்திற்கும் இலங்கை சட்டக் கல்லூரிக்கும் கூடுதல் அனுமதிகளை பெற வைக்கும் இம்முயற்சியின் ஆரம்ப கருத்தரங்காக இது அமைந்திருக்கும்.
இவ் இலவச கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் 0775746881 எனும் இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தங்களை பதிவு செய்யுமாறு வேண்டுவதோடு அனைத்து மாணவர்களையும் எதிர்வரும் 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இவ் இலவச கருத்தரங்கில் கலந்துகொண்டு முழுமையான பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்
பி.எம்.எம்.ஏ.காதர்
