பிரிட்டிஷ் கொலம்பியாவில், வன்கூவர் பகுதியிலுள்ள வெஸ்ட் என்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவொரு பயங்கரமான தாக்குதல் சம்பவம் என பொலிஸார் விவரித்துள்ளனர். 47 வயதான பெண்ணொருவரும், 24 வயதான ஆணொருவருமே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதிவான சில காணொளி ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





