அஜித் நடித்து வெளியான மங்காத்தா படத்தின் 2ஆம் பாகமான ‘மங்காத்தா 2’ படத்துக்கு இரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.இந்நிலையில் இப்படத்தை இயக்கினால் இரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியுமா என்ற பயம் உள்ளதாக இயக்குநர் வெங்கட்பிரபு கூறியுள்ளார்.
அஜித்தின் 50ஆவது திரைப்படமான மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்தது.
தற்போது ஹொலிவூட் திரையுலகில் இரண்டாம் பாக பருவம் தொடர்ந்து வருவதால் ‘மங்காத்தா 2’ திரைப்படத்தை அஜித் நடிப்பில் இயக்க வேண்டும் என்று அஜித் இரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இது குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவிக்கையில், “மங்காத்தா – 2 திரைப்படத்தை இயக்குவேனா என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கு இரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதனைப் பூர்த்தி செய்வேனா என்ற பயம் எனக்குள்ளது. ஆனால் அஜித் நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்குவேன். அது மங்காத்தா 2 ஆம் பாகமா அல்லது புதிய கதையா? என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.





