இயக்குநர் கே.ஆர். பிரபு இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் LKG திரைப்படத்தின் காணொளி பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.RJ பாலாஜி நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
ஜே.கே. ரித்தீஷ், மயில் சாமி, சந்தானா பாரதி ஆகியோருடன் அரசியல் தலைவரும், திமுக மற்றும் அதிமுக நட்சத்திர பேச்சாளராக இருந்தவருமான நாஞ்சில் சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமகால அரசியலை கேலி செய்துள்ள இப்படத்தில் டிரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.





