கனடாவில் தந்தையினால் படுகொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.கடந்த வியாழக்கிழமை கனடாவின் பிரம்ப்டன் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடாக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார்.
அன்று மாலை சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில் தாய் தனது மகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பொலிஸார் மேற்கொண்ட உடனடி தேடுதல் நடவடிக்கையின்போது உயிரிழந்தநிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதனிடையே, சிறுமியின் மரணத்தில் தந்தைக்கு தொடர்பு இருப்பதாக கருதிய பொலிஸார் ரூபேஷ் ராஜ்குமாரை கைதுசெய்து விசாரணை நடத்தியபோது அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பதைக் கண்டு மருத்துவமனையில் சிகிச்சசைக்காக அனுமதித்துள்ளனர்.
உயிரிழந்த 11 வயது சிறுமி ரியாவுக்காக அஞ்சலி நிகழ்வு நடைபெற்றபோது அதில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இந்த அஞ்சலி நிகழ்வில் தனது மகள் ரியா மிகச் சிறந்த பாடகி என ரியாவின் தாயார் கவலையுடன் தெரிவித்திருந்ததாக கனேடிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.





