கியூபெக்கில் ஏற்பட்ட தீ காரணமாக அதிகளவான மலர்கள் எரிந்து நாசமாகியுள்ளனன.வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்றுமதி செய்யும் நிலையம் ஒன்றிலேயே இன்று(புதன்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
குறித்த தீ விபத்து நாசகாரச் செயலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





