கொதித்தாறிய நீரை பருகுமாறு மொன்றியல் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.மொன்றியல் சுகாதார திணைக்களத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொன்றியலின் பல பகுதிகளிலும் நீரில் பக்டீரியா தாக்கம் அதிகரித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை அடுத்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Lalande, Kirouac, Jean-Paul-Vincent and Claude streets, highways 20 and 132 உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களிடமே இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சிறுவர்களுக்கான உணவுகளைச் சமைக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் மொன்றியல் சுகாதார திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.





