கனடாவில் கடந்த வருட இறுதி முதல் கடும் குளிருடனான காலநிலை நிலவிவரும் நிலையில், இன்றைய தினமும்(புதன்கிழமை) உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனேடிய சுற்றுசூழல் திணைக்களத்தினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய Hamilton, Burlington, Niagara உள்ளிட்ட பகுதிகளுக்கே இவ்வாறு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதியிலுள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீதிகளின் பயணிக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வாகனங்களின் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் 15 வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் ஆறுபேர் காயமடைந்திருந்தனர்.





